பண்டிகைக் காலத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு பொலிசார் சாரதிகளை வலியுறுத்துகின்றனர்.
போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களை ஓட்டுமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறும் பொலிஸ் தலைமையகம் சாரதிகளைக் கேட்டுக்கொள்கிறது.
புத்தாண்டு காலத்தில் பாதுகாப்புக்காக 35,000க்கும் மேற்பட்ட பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.