தெற்கு புளோரிடாவில் நெடுஞ்சாலை அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயுரிலந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
போகா ரேட்டனில் இருந்து டல்லாஹஸ்ஸி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் போகா ரேட்டனில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.