களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்களை அமைப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.
இதற்காக சவுதி அரேபியாவிலிருந்து ஒரு முதலீட்டாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
தற்போது மாலைத்தீவில் கடலில் மிதக்கும் ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கருத்துகளை அவர் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.