ஆப்கானிஸ்தானில், தேர்தல்கள் ஆணையகத்தை, தேவையற்ற ஆணையகமாக அறிவித்த தாலிபான் அரசாங்க நிர்வாகம் அதனை கலைத்துள்ளது.
அத்துடன் தேர்தல் முறைப்பாட்டு ஆணையகமும் கலைக்கப்பட்டுள்ளதாக தாலிபான் அரசாங்கத்தின் பேச்சாளர் பிலால் கரீமி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இந்த இரண்டு நிர்வாக அமைப்புக்களும் தேவையற்றவை. எதிர்காலத்தில் தேவையேற்படும் போது அவற்றை நடைமுறைப்படுத்தலாம் என்று தாலிபானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தாலிபான்கள், அடிப்படை உரிமைகளை குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற நிலையிலேயே ஜனநாயக அமைப்பான தேர்தல் ஆணையகமும் கலைக்கப்பட்டுள்ளது.