follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP1வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் அதிபர்கள் நியமனம்

வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் அதிபர்கள் நியமனம்

Published on

வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான அதிபர் நியமனங்கள் உரிய முறைமையை பின்பற்றி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(09) வாய் மூல விடை க்கான வினாக்கள் வேளையில் பராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

”கடந்த அரசாங்கம் பாடசாலை அதிபர்களை நியமிக்கும் நடவடிக்கைகளில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்திருந்தது. எந்த ஒரு முறைமையையும் பின்பற்றாமல் பதில் அதிபர்களை நியமித்திருந்தது. அதனால் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த விடயத்தில் தேவையற்ற பிரச்சினையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

உரிய முறையை பின்பற்றி தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க அதிபர்களாக பதவி வகிக்க தகுதியுள்ளவர்களுக்கு அவர்களது கல்வித் தகைமைக்கு அமைய நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க வெற்றிடம் காணப்படும் தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு என வேறு வேறு நடைமுறைகளை பின்பற்றாமல் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே விதமான முறைமையையே பின்பற்றி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும்” பிரதமர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் உயிரிழக்கவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக...

[UPDATE] துப்பாக்கி சூட்டில் டேன் ப்ரியசாத் சற்றுமுன் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த...

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...