இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் போட்டிகள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ரசிகர்கள் போட்டிகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளுக்கு முகம்கொடுக்கவுள்ளன. மே மாதம் 11ம் திகதி இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.