இந்தியாவில் இன்று (8) நடைபெறவுள்ள ‘உயர்ந்து வரும் பாரதம்’ மாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தெற்கு ஆசிய மேடை : வளர்ச்சிக்கான திட்டம்” என்ற தலைப்பின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ அங்கு சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். பிராந்திய மற்றும் உலகளாவிய தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டின் முதன்மை உரையை நிகழ்த்தவுள்ளார்.