தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கேகாலை தேர்தல் தொகுதியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர அவர்களின் மறைவையடுத்து அரசியலமைப்பின், 66(அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய 2025 ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் பத்தாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்த்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவுக்கு அமைய இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.