முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் வழங்குவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (07) காலை ஆஜராகிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, “சமூக வலைதளங்களில் என்னதான் கூறப்பட்டாலும், நான் வீட்டுக்குச் செல்லும் போது தந்தை நன்றாகவே இருந்தார்..” எனத் தெரிவித்திருந்தார்.