அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், சார்ஜண்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் சார்ஜண்ட் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நாக்கு பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இவ்வாறு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 24ஆம் திகதியுடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.