follow the truth

follow the truth

April, 5, 2025
HomeTOP2பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது

Published on

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன்.
இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘கூகுள் குட்டப்பா’ படத்திலன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதில் தர்ஷனுக்கு ஜோடியாக அவருடன் பிக்பாஸ் நிக்ழச்சியில் பங்கேற்ற லோஸ்லியா நடித்திருந்தார்.

இந்நிலையில், தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் அருகே காரை பார்க் செய்வது தொடர்பான விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில், ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்த நிலையில், இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் தர்ஷன், நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நடிகர் தர்ஷன் தரப்பும் முறைப்பாடு அளித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, இரு தரப்பு முறைப்பாடுகள் குறித்தும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் தற்போது ஜெ.ஜெ.நகர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சிசனை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரிவான திட்டம்

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சிசனை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த முதற் கட்ட கலந்துரையாடல்...

டிக்டாக் செயலிக்கு மேலும் 75 நாட்கள் கால அவகாசம் வழங்கிய டிரம்ப்

சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு...

இந்தியப் பிரதமர் விஜயம் – கொழும்பில் மூடப்படும் வீதிகள் புதிய அறிக்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போக்குவரத்துத் திட்டத்தின்படி கொழும்பைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்படும்...