ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விரும்பினால் தன்னை மீண்டும் சிறையில் அடைக்க முடியும் என்றும், பத்து முறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், தனது மனைவி சிறையில் அடைக்கப்பட்டால் என்ன செய்வது என்று தனக்குத் தெரியும் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கூறுகிறார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒருபோதும் கைவிடவில்லை என்றும் அவர் கூறினார்.
பொதுஜன பெரமுன மேடைக்கு தாம் புதியவரல்ல என்றும், மிகவும் கடினமான காலங்களிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்ததாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.