சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் நாடு மீண்டும் பழைய இக்கட்டான நிலைக்குத் திரும்பும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவருவது அவசியம் என சுகாதார அமைச்சின் கோவிட் தொடர்பிலான பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் தினசரி 600 – 700 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். 20 – 30க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலானோர் தினசரி உயிரிழக்கின்றனர்.
இந்த நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மிகவும் அவதானமிக்க நிலைக்கு சென்று விடும். நாட்டிற்குள் நுழையும் எந்தவொரு வைரஸிலிருந்தும் பாதுகாக்க பூஸ்டர் தடுப்பூசி மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.