follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP1இந்தியப் பிரதமரின் வருகைக்காக நாளைமறுதினம் விசேட போக்குவரத்து திட்டம் அமுலுக்கு

இந்தியப் பிரதமரின் வருகைக்காக நாளைமறுதினம் விசேட போக்குவரத்து திட்டம் அமுலுக்கு

Published on

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் பயணத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை பொலிஸ் விசேட போக்குவரத்துத் திட்டத்தையும் விசேட பாதுகாப்புத் திட்டத்தையும் செயல்படுத்தும்.

அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி ஆகியவை அவ்வப்போது மூடப்பட வேண்டியுள்ளது.

“இந்த காலகட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மக்கள், இந்த வீதிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

“ஏப்ரல் 5 ஆம் திகதி, கொழும்பு – காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் பத்தரமுல்லையில் உள்ள அபே கம வளாகத்திற்கு அருகில் உள்ள வீதிகள் அவ்வப்போது மூடப்பட வேண்டியிருக்கும்.”

“இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்திற்கு அனைத்து சாரதிகளும் பொதுமக்களும் ஆதரவளிக்குமாறு இலங்கை பொலிஸ் கோரியுள்ளது”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கால்நடை வளர்ப்பின் கீழ் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும் காப்பீட்டு பாதுகாப்பு

விவசாய மக்களை மேலும் மேலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்தும் நோக்கத்தின் அடிப்படையில், பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டு செயல்முறையை...

2025 – 2029 தேசிய ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில்...

மேர்வின் சில்வா ஏப்ரல் 21 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான்...