follow the truth

follow the truth

April, 3, 2025
HomeTOP2ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு சாத்தியம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு சாத்தியம்

Published on

எதிர்காலத்தில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான போக்கு காணப்படுவதாக அந்நாட்டு அரசாங்க அறிக்கைகளை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 முதல் 9 ஆக பதிவாகலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 80% என்று ஜப்பானிய அரசு அறிக்கைகள் மேலும் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கத்தால் சுமார் 300,000 உயிர்கள் பலியாக இருக்கலாம் என்றும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் பசிபிக் கடலோரப் பகுதியிலும் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டால் ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய அறிக்கைகளின்படி, நிலநடுக்கத்தால் ஜப்பானின் பொருளாதாரம் சுமார் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாமல் சட்டதரணியாக இருப்பதற்கான தகுதி குறித்து விசாரணை

பாராளுமன்றம் உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்டதரணியாக இருப்பதற்கான தகுதி குறித்து விசாரணை நடத்துவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் கொழும்பு...

23 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை ஆரம்பித்துள்ளது. 23 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக வழக்கு...

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் எலான் மஸ்க்

அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என அமெரிக்க ஜனாதிபதி...