follow the truth

follow the truth

April, 2, 2025
HomeTOP2புதிய காசா போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் சம்மதம்

புதிய காசா போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் சம்மதம்

Published on

காஸா பகுதியில் புதிய போர் நிறுத்த பிரேரணைக்கு ஹமாஸ் அமைப்புகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா பகுதிக்கு வெளியே உள்ள ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரான கலீல் அல்-ஹயாம், எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் அனுப்பிய போர்நிறுத்த முன்மொழிவுக்கு தனது அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தத் திட்டம் இஸ்ரேலியப் பிரதமரால் பெறப்பட்டதாகவும், அமெரிக்காவுடன் முழுமையான ஒருங்கிணைப்புடன் மத்தியஸ்தர்களுக்கு எதிர்த் திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த மட்டுப்படுத்தப்பட்ட போர்நிறுத்தம் ரமழானின் கடைசி நாளில் தொடங்கப்படலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Forbes உலக பணக்காரர் பட்டியல் வெளியீடு : அம்பானிக்கு பின்னடைவு

ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக...

இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு களமிறக்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு குழு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக, இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க...

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவி பிமல் ரத்நாயக்கவுக்கு?

இலங்கையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின்...