follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉள்நாடுதென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை

தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை

Published on

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் தென்னை உற்பத்திச் சகையினால் நடைமுறைப்படுத்தப்படும் கப்ருகட சவியக் – வெடி பலதாவக் ( தென்னைக்கு பலம் – அதிக விளைச்சல்) திட்டத்தின் கீழ் தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் நிகழ்வு நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் ரஷ்யா அரசாங்கம், யூரல் கலி நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஆகியன ஒன்றிணைந்து இந்த திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

ரஷ்யாவின் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற 27,500 மெற்றிக் தொன் எம் ஓ பி உரம் மற்றும் ஏப்பாவெல ரொக் பொஸ்பேட் , யூரியா கலந்த தென்னை உற்பத்திக்கான விசேட ஏஎம்பி தென்னை உரம் 56,700 மெற்றிக் தொன்னை தயாரிக்கும் அரச உரக் கம்பனி தற்போது இதற்காக செயற்பட்டு வருகிறது.

இந்த உரத்தை மானிய விலையில் வழங்குதல் மற்றும் விநியோகித்தல் என்பவற்றுக்காக அவசியமான நடவடிக்கைகளை தென்னை உற்பத்திச் சபை மற்றும் அரச உரக் கம்பனி ஆகியன மேற்கொண்டு வருகின்றன.

சந்தையில் 9000 ரூபாய்க்கு காணப்படும் 50 கிலோ உரப் பொதி ஒன்றை 4,000 ரூபாய் மானிய விலையில் வழங்கும் செயற்பாடு இதற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

அதன்படி இம்மாதம் 30ஆம் திகதி வெள்ளவாய பிரதேச செயலாளர் பிரிவில் தென்னை உற்பத்திச் சபையின் ஹந்தபானகல தென்னை நாற்று மேடையில் இடம் பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரிசியை மீண்டும் இறக்குமதி செய்ய பரிந்துரை

தட்டுப்பாடு இல்லாமல் நுகர்வோருக்கு அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அரிசியை மீண்டும் இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும்...

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வருமாறு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் விலைகள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அதன்படி,...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை பிறப்புச் சான்றிதழின் அசல் நகல்களுடன் மீண்டும் ஏற்றுக்கொள்ள உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை...