follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉலகம்மியன்மார், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு 

மியன்மார், தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு 

Published on

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. மியன்மாரில் 103 உயிரிழப்புகளும், தாய்லாந்தில் 4 உயிரிழப்புகளும் இதுவரை பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந் நிலநடுக்கம்  இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலநடுக்கத்தால் கடுமையான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.
மியான்மரில் 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில்,  உயிரிழப்பு எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு சாத்தியம்

எதிர்காலத்தில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான போக்கு காணப்படுவதாக அந்நாட்டு அரசாங்க அறிக்கைகளை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த...

புதிய காசா போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காஸா பகுதியில் புதிய போர் நிறுத்த பிரேரணைக்கு ஹமாஸ் அமைப்புகள் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா...

மியன்மார் நில அதிர்வில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மியன்மாரில் நேற்று மாலை 5.1 மெக்னிடியூட் அளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நேற்று...