follow the truth

follow the truth

April, 4, 2025
Homeஉள்நாடுபாடசாலை விடுமுறை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவை

பாடசாலை விடுமுறை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவை

Published on

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு ரயில்வே திணைக்களம் இன்று முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான ரயில் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள ரயில் சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விசேட ரயில் சேவையானது இரவு 7.30க்கு புறப்படவுள்ளது.

அந்த ரயில் கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் நோக்கி அந்த நாட்களில் பிற்பகல் 5.20 இற்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதுதவிர, கொழும்பு – கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி எதிர்வரும் 29,30 மற்றும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விசேட ரயில் சேவையானது காலை 5.15 இற்கு புறப்படவுள்ளது.

அந்த ரயில் திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து அந்த நாட்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட...

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள்...

சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 13...