தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டபத்தைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் மன்றம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
மருதானை வைத்தியசாலை சுற்றுவட்டம், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பகுதிகளுக்குள் பிரவேசித்தல் மற்றும் வீதிகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்று(27) பிற்பகல் 2.30 முதல் நாளை(28) மாலை 6 மணி வரை ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.