ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.
ஐதராபாத் தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோற்றது.