வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்யவிரும்பும் எந்தவொரு இலங்கை பிரஜையும் அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அனுமதியை பெற்ற பின்னரே திருமணப்பதிவை முன்னெடுக்கவேண்டும் என பதிவாளர் நாயக திணைக்களம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவின் பேரிலேயே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என பதிவாளர் நாயகம் டபில்யூஎம்எம்பி வீரசேகர தெரிவித்துள்ளார்.