follow the truth

follow the truth

April, 1, 2025
HomeTOP1நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் விதித்த தடை ஒருதலைப்பட்சமானது - வௌிவிவகார அமைச்சு

நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் விதித்த தடை ஒருதலைப்பட்சமானது – வௌிவிவகார அமைச்சு

Published on

முன்னாள் இராணுவப் பிரதானிகள் மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இன்று சந்தித்த வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இலங்கையில இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக குறிப்பிட்டு ஓய்வுபெற்ற ஜெனரல் சவேந்திர சில்வா, ஓய்வுபெற்ற அட்மிரல் ஒவ் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட, ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கு தடை விதிப்பதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.

இவர்களை தவிர ELLT அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது.

நாடுகள் மேற்கொள்ளும் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காது என ஐக்கிய இராச்சியத்தின் இந்த தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்குவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன் கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பாக உள்ளகப் பொறிமுறையின் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக்கிடம் வௌிவிவகார அமைச்சில் வைத்து இன்று தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் முட்டை வருமானத்திற்கு 18% வற் வரி விதிப்பு

முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இன்று முதல் 18 சதவீதம் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி...

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எஸ்.எஃப் சரத்துக்கு மரண தண்டனை

2014ஆம் ஆண்டு பொரளை பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்ற கே.எம். சரத்...

முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பிலான அறிவித்தல்

எரிபொருள் விலை குறைந்துள்ள போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என மேல் மாகாண முச்சக்கரவண்டி...