தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடமைகளைச் செய்த ஆயுதப்படை அதிகாரிகளை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நேரடியாக நிற்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஆயுதப்படைத் தளபதிகளுக்கு எதிராக பிரிட்டன் விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்த முடிவு செய்தவர் அப்போதைய இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த தாம்தான் என்றும், அந்த முடிவை இலங்கை ஆயுதப் படைகள் செயல்படுத்தின என்றும் முன்னாள் ஜனாதிபதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிவிப்பு கீழே,