follow the truth

follow the truth

April, 1, 2025
HomeTOP2அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க திட்டம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க திட்டம்

Published on

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“காலத்தின் தேவைக்கான உணவுப் பொதி” வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 11 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதியொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கமைய, ரூ. 5,000 பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய “காலத்தின் தேவைக்கான உணவுப் பொதியொன்று” ரூ. 2,500 இற்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, அஸ்வெசும நலன்புரி நன்மைகளை எதிர்பார்த்து புதிதாக விண்ணப்பித்துள்ள 812,753 விண்ணப்பங்களில் தகைமையுடைய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, 2025.04.01 தொடக்கம் 2025.04.13 வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களிலும் COOPFED விற்பனை நிலையங்கள் மூலமும் உணவுப் பொதியை பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும்...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (30) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக அகில...