இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
மசகு எண்ணெய் உற்பத்தி வளர்ச்சிப் பாதையில் உள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் கொள்வனவு கட்டளை செய்துள்ளமையைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மசகு எண்ணெய்யின் உற்பத்தியை தற்போது இரட்டிப்பாக்க முடிந்துள்ளதாக கனியவளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவாக 50,000 ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தார்.