பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற 2024 லெஜண்ட்ஸ் லீக் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்காவிடம் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதாகக் கூறியதாகக் கூறப்படும் Kandy Samp Army அணியின் உரிமையாளரான இந்திய Yoni Patel இற்கு மாத்தளை உயர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக 85 மில்லியன் ரூபாய் அபராதமாகவும், உபுல் தரங்காவுக்கு 2 மில்லியன் ரூபாய் இழப்பீடாகவும் செலுத்த உத்தரவிடப்பட்டது.