follow the truth

follow the truth

March, 30, 2025
HomeTOP2நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள்

நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள்

Published on

மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி,
1. பிரான்ஸ் தூதுவராக ரெமி லம்பேர்ட்டும் (Mr. Remi Lambert)
2. பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம். கலீலும் (Mr.Ihab I.M. Khalil)
3. நேபாள தூதுவராக கலாநிதி பூர்ண பகதூர் நேபாளியும் (Dr. Purna Bahadur Nepali) நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்டிக்கர் விவகாரம் – இணைய பாவனை, மன உந்துதல்களுக்கு உள்ளாகி கடும்போக்காளர் என்ற அடிப்படையிலேயே இளைஞனை கைது செய்தோம் – பொலிஸ் ஊடகப் பிரிவு

கடந்த 22ஆம் திகதி கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது...

எதிர்காலத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை – ஜனாதிபதி

எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி அநுர...

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது – விஜயதாச ராஜபக்ஷ

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக, திசைகாட்டி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...