கடனுதவி அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெயை வழங்க சிங்கப்பூர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிங்கப்பூரில் இருந்து 180 நாட்களுக்குள் கடன் தீர்வு ஒப்பந்தத்தில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யப்படும் என்றும், ஆறு கட்டங்களாக கச்சா எண்ணெய் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் பெறப்படும் கச்சா எண்ணெய் ஜனவரி மாத நடுப்பகுதிக்குள் கிடைத்துவிடும் என்றும், அதன்படி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.