அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவையை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார்.
55 வயதான ஹண்டர் பைடன் மற்றும் 43 வயதான ஆஷ்லி பைடன் ஆகியோர், 30க்கும் மேற்பட்ட இரகசிய சேவை முகவர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சில மணி நேரங்களுக்குள் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.