follow the truth

follow the truth

March, 20, 2025
HomeTOP2அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தில் திருத்தம்

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தில் திருத்தம்

Published on

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று(17) நடைபெற்ற அமைச்சரவையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படுவதுடன், 2415/66 மற்றும் 2024.12.21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்திட்டம் இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

• அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தின் ஐ ஆவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘நிலையற்றவர்கள்’ சமூகப் பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலப்பகுதியை 2025.04.30 வரை நீடித்தல்

• குறித்த உதவி வழங்கும் திட்டத்தின் II ஆவது அட்டவணையின் உள்ளடக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகை மற்றும் சிறுநீரக நோய்க்கான உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகையை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் முதியோருக்காக வழங்கப்படும் உதவுதொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் குறித்த தீர்மானங்களை 2025 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்

• II ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவுதொகையைப் பெறுகின்ற இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு மேற்குறிப்பிட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய, கொடுப்பனவுக் காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல்

• 2025 ஏப்ரல் மாதத்தின் பின்னர் நிலையற்றவர்கள் சமூகப் பிரிவினருக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டாலும், குறித்த குடும்பங்களிலுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோருக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுக்கான காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல்.

• புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்களின் விண்ணப்பங்கள் உயர்ந்தபட்ச வரையறையின் கீழ், உள்வாங்கி தகுதி பெறுகின்றவர்களுக்கு குறித்த கொடுப்பனவை 2025.12.31 வரை வழங்கல்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் சுகாதார அமைச்சு புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

கொழும்பில் உள்ள காசல் தெருவில் அமைந்துள்ள மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கபட்டுவரும் சுகாதார அமைச்சின் 16 மாடி அலுவலக...

ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்

இந்த வருட வரவு செலவுத் திட்டம் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...