follow the truth

follow the truth

March, 20, 2025
HomeTOP2விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தில் 29 இலட்சம் பணம் மாயம் - நாமல் கருணாரத்ன

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தில் 29 இலட்சம் பணம் மாயம் – நாமல் கருணாரத்ன

Published on

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சுசந்த குமார நவரத்னவால் வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியம் 2,934,310 ரூபாய் கொள்ளியிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த விவசாயிகளின் உர மானியத்துக்கான நிதி காணாமல் போனமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2024ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால்...

யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் காஸாவில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு சவூதி கண்டனம்

காஸாவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்த நிறுத்தத்திற்கு மத்தியில் தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியா கண்டனம்...

ரணிலின் குடியுரிமையை இரத்து செய்யுமாறு கோரிக்கை

1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு ஒன்று, சர்ச்சைக்குரிய படலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய...