நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக, கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு பிராந்தியத்தில் 16 மணி நேர நீர் தடை செயல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (19) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான 16 மணி நேரங்களுக்கு கட்டான வடக்கு பகுதியிலுள்ள பல இடங்களில் நீர் விநியோகம் தடைபடவுள்ளது.
இதற்கமைய, பம்புகுளிய, முருதான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கிழக்கு கட்டான, உடங்காவ, மானச்சேரிய, தோப்புவ, மேற்கு களுவாரிப்புவ, மேல் கடவல, கீழ் கடவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, ஆடிக்கண்டிய, எத்கால, எத்கால தெற்கு, மஹா எத்கால மற்றும் கிழக்கு களுவாரிப்புவ ஆகிய பிரதேசங்களில் இந்த காலப்பகுதியில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.