கடந்த சில மாதங்களாக செர்பியாவை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை செர்பியாவின் தலைநகரில் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நவம்பர் மாதம் அங்குள்ள ஒரு ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததில் 15 பேர் பலியானதைத் தொடர்ந்து, அங்கு ஊழலுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.
இந்தப் போராட்டத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர்கள் பங்கேற்றதாக அரசாங்கம் மதிப்பிட்டாலும், 325,000 பேர்கள் கூடியிருந்ததாக ஒரு சுயாதீன கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை சரியானதாக இருக்கும் பட்சத்தில் செர்பியாவின் வரலாற்றில் இது மிகப்பெரிய பேரணியாக வகைப்படுத்தப்படுகிறது.