follow the truth

follow the truth

March, 18, 2025
HomeTOP2வதந்திகளை நம்ப வேண்டாம் - ஜீவன் தொண்டமான்

வதந்திகளை நம்ப வேண்டாம் – ஜீவன் தொண்டமான்

Published on

உயர்மட்ட குழுவினரால் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும்., தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாம் என வேட்பாளர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்(2025) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கான தேர்வுகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், ஒரு சிலரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தனித் தீர்மானம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர் இணைந்து எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமையவே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தயார் படுத்தப்படும்.

ஆகவே எந்த ஒரு நபரும் தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாமென கட்சியின் உயர்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது அதேவேளையில், இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல்...

மேர்வின் சில்வாவிற்கு மீண்டும் விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மார்ச் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அவர்...