follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்

Published on

தற்போது நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருகின்றமையினால் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கின்றனர். ஆகையால் இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்து, சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் என்பன தொடர்பில் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தி இதற்கான தீர்வுகளை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கின்றேன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பு குறித்து நேற்றும் பேசினேன். அக்மீமன பூஸ்ஸ, தல்தென, மீகஹகிவுல, அகுனுகொலபலஸ்ஸ, வெலிவேரிய துப்பாக்கிச் சூடுச் சம்பவங்கள், மூதூரில் படுகொலை, மீண்டும் அம்பலாங்கொடையில் கொலை, கொழும்பு கிராண்ட்பாஸில் இரு கொலைகள் என பல சம்பங்கள் நடந்துள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் பிரச்சினை காணப்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கும் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பங்கர கொலைக் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட அவசர வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு கொலையை ஏற்பாடு செய்த பெண்ணையும் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தினமும் நடக்கும் இந்த கொலைவெறி கலாசாரத்திற்கு முடிவே இல்லையா என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர், நாட்டு மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், தெளிவான தீர்வை வழங்கி அதனை நாட்டுக்கு முன்வைக்குமாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக...

2030ம் ஆண்டளவில் சிறுவர்கள் தொழிலாளர்களை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும்

சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering Committee on Elimination of Child...

“கிளீன் ஸ்ரீலங்கா” வின் கீழ் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

இன்று (15) உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, சமூகத்திற்குள் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றை...