துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரை 7 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தறை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பணிபுரிந்தபோது துப்பாக்கியைத் திருடியுள்ளார்.
அதன்பின்னர், குறித்த துப்பாக்கியை ரெப் பாடகரிடம் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு மாத்தறை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொட்டவில பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.