follow the truth

follow the truth

March, 14, 2025
Homeலைஃப்ஸ்டைல்உணவில் வெண்ணெய் சேர்ப்பது உயிருக்கு ஆபத்தை உருவாக்குமாம்

உணவில் வெண்ணெய் சேர்ப்பது உயிருக்கு ஆபத்தை உருவாக்குமாம்

Published on

வெண்ணெய்! ஆரோக்கியமான உணவுதான். ஆனால் அதே வெண்ணெயை அன்றாடம் 10 கிராம் அளவுக்கு சேர்த்தாலே உயிருக்கு உலை வைத்து விடும் என்ற ஆராய்ச்சி முடிவுகள் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

2.21 லட்சம் பேரிடம் கடந்த 33 வருடங்களாக ஆராய்ச்சி செய்து உள்ளார்கள். அவர்களின் உணவு முறைகளில் வெண்ணெய் பயன்பாட்டை பகுத்து பார்த்ததில்தான் இதை கண்டுபிடித்து உள்ளார்கள்.

வெண்ணெயில் நிறைய கொழுப்பு சத்து அடங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக லிப்போ புரோட்டீன் மற்றும் கெட்ட கொழுப்பு மிகுந்து உள்ளது. இவைகள் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் படர்ந்து ரத்த குழாய்களில் அடைப்பை உருவாக்கி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு 10 கிராம் வெண்ணெய் உடலுக்குள் தினமும் சென்றால் 7 சதவீதம் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பதாக கண்டுபிடித்து உள்ளார்கள்.

இதற்கு நேர்மாறாக சமையலுக்கும், உணவிலும் தாவர எண்ணைகளை பயன்படுத்தினால் இதய நோய்க்கான வாய்ப்பு 6 சதவீதம் குறைவதாக தெரிய வந்து உள்ளது. அமெரிக்காவில் ஆலிவ் எண்ணெய், சோயா எண்ணெய், கனோலா போன்ற எண்ணெய் வகைகளை பயன்படுத்துகிறார்கள். இதில் ஆபத்து குறைவு என்கிறார்கள்.

நம்ம வீடுகளில் வெண்ணெய் பயன்பாடு குறைவுதானே? சமையல் எண்ணெய் தானே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்க தோன்றும்.

வெண்ணெய் எப்படி சமையலில் அதிக அளவு புகுகிறது? பாரம்பரிய சமையலை புறந்தள்ளி யூடியூப் பார்த்து சமையல் செய்வதே இப்போது அதிகம். நூடுல்ஸ், பாஸ்தா செய்யும் போது சுவைக்காக வெண்ணெய் சேர்க்கிறார்கள். கேக், பிரட் ஆம்லெட், பட்டர்நான், பன்னீர்பட்டர் மசாலா, பட்டர் சிக்கன் உள்பட சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளில் சுமார் 95 விதமான உணவு பொருட்கள் என்று அதிக அளவு வெண்ணெய் கலந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் மூலம் நமக்கு தெரியாமலே வெண்ணெய் அதிக அளவில் நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.

மில்க் புரோட்டீன் நல்லதுதான். ஆனால் அவ்வாறு சுத்தமாக கடைந்து எடுக்கப்படும் வெண்ணெய் மார்க்கெட்டில் தற்போது கிடைக்கும் விலைக்கு நிச்சயம் கொடுக்க முடியாது.

குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும். சுவையும் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக வெண்ணையில் சல்பர், விலங்கு கொழுப்புகள், மாக்ரைன் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டதுதான். இதனால் தான் உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. சீஸ், மயோனைஸ் போன்ற உணவு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தாவர எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது தான். அதையும் குறைந்த அளவு பயன்படுத்தலாம்.

பொதுவாக ஒரே எண்ணெயை நீண்ட நாள்கள் பயன்படுத்தக் கூடாது. வெவ்வேறு எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தினமும் காலையில் கற்றாழை ஜூஸில் லெமன் கலந்து குடிங்க..

பெரும்பாலான வீடுகளில் அழகுக்காகவும், திருஷ்டிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு செடி தான் கற்றாழை. இந்த கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே...

உடற்பயிற்சி வெறும் வயிற்றில் செய்வது நல்லதா? சாப்பிட்ட பிறகு செய்வது நல்லதா?

உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நடைப்பயிற்சி மேற்கொள்வது கூட உடல் எடை இழப்புக்கு வித்திடும்...

IIFA 25வது விருது வழங்கும் விழா

இந்தியாவின் குஜராத்தில் நடைபெற்ற 25வது IIFA விருதுகளில் கிரண் ராவின் Laapataa Ladies திரைப்படம் அதிக விருதுகளை வென்றுள்ளது. அதன்படி,...