follow the truth

follow the truth

March, 14, 2025
Homeவிளையாட்டுடெல்லி அணியின் கெப்டனாக அக்ஷர் படேல் நியமனம்

டெல்லி அணியின் கெப்டனாக அக்ஷர் படேல் நியமனம்

Published on

பதினெட்டாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அக்ஷர் படேல் கெப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டுபெலிசிஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் கெப்டனுக்கான தேர்வில் இருந்தது. இதில் கே.எல்.ராகுலை நியமிக்க டெல்லி அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அவர் அதை நிராகரித்தார். மேலும் அவர் தொடக்கத்தில் சில போட்டிகளை தனிப்பட்ட காரணங்களுக்காக தவற விடுகிறார்.

இந்நிலையில் அக்ஷர் படேலை டெல்லி அணியின் கெப்டனாக அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அக்ஷர் படேல் 2019-ம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவர் ரூ.18 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.

அக்ஷர் படேல் ஐ.பி.எல்.லில் 150 ஆட்டத்தில் விளையாடி 1653 ரன்கள் எடுத்துள்ளார். 123 விக்கெட் வீழ்த்தி உள்ளார். கடந்த சீசனில் டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கெப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூசிலாந்திற்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7...

மாத்தறை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில்

மாத்தறை பொல்ஹேன சர்வதேச கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலை மற்றும் மைதானத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்குத் தேவையான முதற்கட்டப் பணிகளை...

இன்ஸ்டாவில் 17 மில்லியன் Followers பெற்ற முதல் ஐ.பி.எல் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி...