பாடசாலை அபிவிருத்தி சங்கங்களால் வசூலிக்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் உள்ள ஒரு முக்கிய பாடசாலையில் கட்டணத்தை ரூ.1000 அல்லது 1500 ஆல் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (13) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.