மாத்தறை பொல்ஹேன சர்வதேச கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலை மற்றும் மைதானத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்குத் தேவையான முதற்கட்டப் பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைத் தொடங்குவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில், முன்மொழியப்பட்ட நிலத்தின் அறங்காவலரான அமரபுர தர்மரக்ஷித நிகாயவின் மகாநாயக்கர் ஆனந்த மஹிமியன், இலங்கை கிரிக்கெட் சார்பாக ஷம்மி டி சில்வா, சனத் ஜெயசூரிய மற்றும் சுஜீவ கோடலியத்த, மாத்தறை விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிதி ஒதுக்கிய போதிலும் இன்னும் புதுப்பிக்கப்படாத சனத் ஜெயசூர்யா மைதானத்தின் புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.