பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத் தலைவர் சாமலி வத்சலா குலதுங்க தெரிவிக்கையில், பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் இயங்கும் அலுவலகங்களை மூடுவதற்கும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.