Colorado Springs விமான நிலையத்திலிருந்து Dallas Fort Worth நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக பணியாளர்கள் தெரிவித்ததை அடுத்து, விமானம் Denver சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய தரையிறக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
விமானத்தில் இருந்த 172 பயணிகளும் 6 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.