ஹோமாகம பகுதியில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பொருத்தமான பகுதிக்கு மான்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(12) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது விவசாயிகளின் பயிர்களை கடுமையாக பாதித்துள்ளது என்றார்.