தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று(12) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம் உரிய காலப்பகுதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், முழுமையற்ற விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இதுவரையில் 54 அரசியல் கட்சிகளும் 84 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.