நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை பெய்யும்.
அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.