follow the truth

follow the truth

March, 12, 2025
Homeஉள்நாடுபெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் - உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

Published on

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு ஒரு வாரத்திற்குள்ளாகவே இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளமையானது, எமது நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையை உணர்த்துகிறது.

எனவே, இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் விரைந்து கவனம் செலுத்தி, இது தொடர்பான முறையான சட்டங்களை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதற்கு எதிர்க்கட்சி தமது முழுமையான ஆதரவை நல்கும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்பீட்டுத் திட்டம்

சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக்ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் 15,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை...

பொலிசாருக்கு LGBTQ குறித்த பாடநெறி..

நெதர்லாந்தின் உதவியுடன், ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் குறித்து உள்ளூர் பொலிஸ் நிலைய பொலிசாருக்கு கல்வி கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கட்டான தேசிய...