follow the truth

follow the truth

March, 12, 2025
Homeவிளையாட்டுகெப்டன் பும்ரா இல்லை - ஒருநாள் இந்திய அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்

கெப்டன் பும்ரா இல்லை – ஒருநாள் இந்திய அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்

Published on

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதை அடுத்து, உலகின் சிறந்த ஒருநாள் அணியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏழு ஐசிசி கோப்பைகளை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்தியா ஐந்து கோப்பைகளை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு கேப்டனாக எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித்துக்கு கெப்டன் பதவி அளிக்கப்படவில்லை. தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவை கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.

மூன்றாம் வரிசையில் விராட் கோஹ்லியும் நான்காம் வரிசையில் மொஹிந்தர் அமர்நாத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 1983-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வெற்றியில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அமர்நாத் ஆட்டநாயகன் விருது பெற்றவர்.

2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங் ஐந்தாம் வரிசையிலும் மஹேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஆறாம் வரிசையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஏழாம் வரிசையில் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் கபில் தேவ், எட்டாம் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அடுத்ததாக அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சமி மற்றும் ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியில் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை.

சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி ஆகிய நான்கு வீரர்களுக்கு சுனில் கவாஸ்கர் தனது சிறந்த ஒருநாள் அணியில் இடம் அளித்துள்ளார்.

அதேபோல, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோருக்கும் இடம் அளித்துள்ளார்.

1983 உலகக் கோப்பை வென்ற மொஹிந்தர் அமர்நாத் மற்றும் கபில் தேவ் ஆகியோருக்கும் இடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்-டைம் ஒருநாள் போட்டி இந்திய அணி:

சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, மொஹிந்தர் அமர்நாத், யுவராஜ் சிங், தோனி (கெப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கபில் தேவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், முகமது ஷமி, ஜாகீர் கான்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு

2025ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL)...

சாம்பியன்ஸ் டிராபி நிறைவு விழா மேடையில் பாகிஸ்தான் புறக்கணிப்பு

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா...

2025 சாம்பியன்ஸ் டிராபியை 3வது முறையாக வென்றது இந்தியா

ICC சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்தை 3வது முறையாக வென்றது இந்திய அணி. துபாயில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில்...