அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய பொதிகளை பொறுப்பேற்றல், பயண சீட்டு விநியோகித்தல் என்பவற்றை புறக்கணிக்கும் நடவடிக்கை தொடருமென அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத நிலைய அதிபர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்துள்ள பயணச்சீட்டு விநியோகிப்பதில்லை என்ற தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு தினமும் 80 முதல் 90 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.