சிறுதொகை அபராதத்தை செலுத்த முடியாமல் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேருக்கு பொதுநலன் கருதி விடுதலை பெற்றுக்கொடுக்கப்பட்டது.
டெய்லி சிலோன் மற்றும் NEXTV ஆகிய டிஜிட்டல் செய்தித் தளங்களின் அனுசரணையுடன் Project Hope (நம்பிக்கைத் திட்டம்) என்ற நற்பணியை மாலன் டேல் ஃபெரிரா இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
மிகச் சிறிய குற்றச் செயல்களுக்கான மிகக் குறைந்த அபராதத் தொகையை செலுத்த முடியாமல் சிறைவைக்கப்பட்டிருந்தவர்களின் அபராதத் தொகையை செலுத்தி இந்தக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த 9 ஆண்கள் 2 பெண்கள் என மொத்தம் 11 பேர் மொத்தமாக 45 ஆயிரம் ரூபா அபராதத்தை செலுத்தி விடுவிக்கப்பட்டனர். 5 ஆயிரம் ரூபா அபாராதம் செலுத்த முடியாத இந்தக் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்ததுடன், இவர்களுக்கான செலவுகளை மக்கள் நிதியில் இயங்கும் அரசாங்கமே செலவிட்டு வந்தது.
சிறையில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நாளாந்தம் 600 ரூபா விகிதம் 11 பேருக்கு நாளாந்தம் 6600 ரூபா செலவிடுகிறது. ஆறுமாதங்களுக்கு சுமார் 10 லட்சம் ரூபா வரை செலவிட்டுள்ளது. தற்போது 45,000 ரூபா அபராதத்தை வழங்கி இவர்களுக்கான விடுதலை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை என்பது மனிதர்களை சீர்த்திருத்தவே உதவும் என்ற அடிப்படையில், நத்தார் பண்டிகையை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு டெய்லி சிலோன், நேஒவவுஎ நிறுவனங்கள் முழுமையான அனுசரணையை வழங்கியிருந்தது.